வெடிப்புறப் பேசு

ஆபத்தான சாகசங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா டிடிஎப்.வாசன்

ஆபத்தான சாகசங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா டிடிஎப்.வாசன்

பைக் சாகசங்களால் டிஜிட்டல் உலக இளைஞர்களை வசீகரிக்கும் டிடிஎப் வாசன் காஞ்சிபுரம் அருகே பைக் சாகசத்தின்போது விபத்துக்குள்ளானது. பைக் சாகசத்தால் தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வரும் வாசன் இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். டிடிஎப். வாசன் விபத்து குறித்தும் அவரது பைக் சாகசம் குறித்தும் சமூக வலைதளங்களில் பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. 

பிரபல கவிஞர் கவிதா பாரதி மற்றும் மருத்துவர் சரவணக்குமார் ஆகியோர் தங்கள் முகநூல் பக்கங்களில் எழுதிய கருத்துகள் இங்கு தொகுத்து அளிக்கப்படுகிறது. 

பொது இடத்தில் சாகசம் கூடாது

இருசக்கர, நாற்சக்கர வாகனங்களில் சாகசங்கள் செய்ய விரும்பினால் அதற்குரிய பயிற்சிபெற்று அதற்கான மைதானங்களில்தான் செய்யவேண்டும்..

பொதுச்சாலையில் அனுமதிக்கப்பட்ட வேகத்திற்குமேல் செல்வது குற்றம்.. இதனால் சாலையில் செல்லும் அப்பாவிப் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. எனவே பொதுச்சாலையில் வீரசாகசம் செய்ய முயலும் சமூகவிரோதிகளை கொலைமுயற்சி, தற்கொலை முயற்சி போன்ற வழக்குகளில் தண்டிக்க வேண்டும்.

வாசன் என்னும் வேகப்பிராந்தன் காஞ்சிபுரம் சாலையில் விபத்துக்குள்ளான காணொளியைக் கண்டேன்.. நல்வாய்ப்பாக சாலையில் சென்ற யாரும் இதில் பாதிக்கப்படவில்லை.பல இளைஞர்களின் தற்சாவுக்குக் காரணமானவன் இந்தப் பிராந்தன்..

இவனை வழிகாட்டியாகக்கொண்டு உங்கள் பிள்ளையும் அதிவேக வண்டியை வாங்கியிருக்கலாம்.பொதுச்சாலையில் இருசக்கர சாகசங்கள் செய்ய முயலலாம். அப்படியிருந்தால் அந்த வாகனத்தை நீங்களே பழைய இரும்புக்கடையில் போட்டு அவனுக்கு பேரீச்சம்பழம் வாங்கிக் கொடுத்துவிடுங்கள். துப்பாக்கி சுடும் விளையாட்டில் இந்தியாவுக்காகத் தங்கப்பதக்கம் பெற்றவராக இருந்தாலும், பொதுஇடத்தில் சுட்டுப்பழக முடியாது

ஸ்போர்ட்ஸ் பைக் ரைடர் ஆனாலும் ஆபத்தை புரிந்து கொள்ள வேண்டும்

வண்டி விழுந்த வேகத்துக்கு கையில மட்டும் தான் அடிங்கிறதே ஆச்சரியமா இருக்கு. 

இரண்டு விசயம்…

1) வேகமா வண்டி ஓட்டும் போது தேவையான சேஃப்டி கியர் எல்லாம் முறையா போட்டிருக்கான். இதனால ஒரு சிராய்ப்பு காயம் கூட ஏற்படாம லாவகமா தப்பிக்க முடிஞ்சிருக்கு. இல்லேன்னா மூஞ்சி தான் முதல்ல பேந்துருக்கும். 

2) ஸ்லிப் ஆகுதுன்னு புரிஞ்ச உடனே வண்டியை கண்ட்ரோல் பண்ண முயற்சிக்காம அதை துண்டா விட்டுட்டு குதிச்சிருக்கான். இது ரொம்ப ரொம்ப சென்சிபிளான விசயம்… இதை தான் reflex ன்னு சொல்றது. மூளையோட உத்தரவுக்கு முன்னாடியே தன்னிச்சையா செயல்படுறது அது…

வண்டியை கட்டுப்படுத்த முயற்சி செய்திருந்தா அதே வேகத்துல வண்டியோட சேர்ந்து உருண்டிருப்பான். கழுத்து உடைந்திருக்கும்… ஆனா தெளிவு..! 

அதே மாதிரி அந்த மைக்ரோ நொடியிலும் தனக்கு ஆபத்து குறைவான இடம் எதுன்னு புரிஞ்சு அந்த பக்கமா சாய்ஞ்சு குதிச்சிருக்கான்… அதனால தான் வலது கைல அடிபட்டிருக்கு.. அந்த கையை ஊன்றி தான் டைவ் அடிச்சிருக்க முடியும். ரொம்ப தெளிவு..!! 

நல்ல அனுபவமும் இயற்கையாக கிடைக்கிற சில சென்சஸும் அதுக்கும் மேல பாதுகாப்பு கவசங்களும் முறையா இருந்தா தான் இது சாத்தியம்..! 

அவன் ஒரு தரமான ஸ்போர்ட்ஸ் பைக் ரைடர் என்பதை ஒத்துக்க தான் வேணும்…! 

ஆனா இதே மாதிரி இன்னொரு முறை தப்பிக்க முடியுமன்னு சொல்ல

முடியாது… அவன் செய்ற செயலோட ஆபத்தை இப்போவாது புரிஞ்சுகிட்டு நிறுத்தினா நல்லது. இன்னும் பெட்டரா முறையா ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்ட போய் அதையே தன்னோட கேரியரா மாத்திக்கலாம்.. இல்லேன்னா அல்பாயுசு தான், பாவம்.

கவிதா பாரதி

சரவணக்குமார்

administrator

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன