வெடிப்புறப் பேசு

பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனை கொண்டாடுதல் நம் கடமை…

பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனை கொண்டாடுதல் நம் கடமை…

பொதுத் தளங்களில், இரண்டு தலைவர்களை திரும்பத் திரும்பப் பேச வேண்டியுள்ளது.இருவருமே அரசியல் வாரிசுகள். ஆனால் இருவருமே அது தரும் அதிகாரத்தைத் தாண்டியவர்களாக வெளிப்படுகிறார்கள்.

இன்று இந்தியாவின் பிரதமர் toxic patriarchy யின் பிரதிநிதி என்றால், இவர்கள் இருவரும் compassionate humanity யின் தரப்பில் நிற்கிறார்கள்.அதில் எனக்கு பிடிஆர் மிக முக்கியமானவராகத் தெரிகிறார்.

தமிழ்நாட்டின் அரசியல் என்பது அதீதப் போட்டிகள் நிறைந்தது. அதன் அத்தனை அசிங்கங்களும் ஒவ்வொரு தேர்தலிலும் வெளிப்படுவதை நாம் கண்டிருக்கிறோம்.

ஆனால், பொது வாழ்க்கையின் உண்மையான இலக்குகளை முன்வைத்து, மக்கள் சேவையை  செயல் திறன் மிக்க வகையில் நிர்வகித்து, தேர்தல்களில் பணம் என்னும் விஷத்தை உபயோகிக்காமல் வென்றது நம்பிக்கை தருவதாக உள்ளது. தமிழ்நாட்டில் இது போன்ற வெற்றிகள் மிகக் குறைவே என்றாலும்,  லட்சியவாதம் இன்னும் மரிக்க வில்லை என நம்பிக்கை தருவதாக இருக்கிறது.

இது போன்ற களத்தில் வெல்லும் அரசியல்வாதிகள், பணியிலும், பொது வாழ்க்கை பற்றிய மெய்யியல் அறிதலும் கொண்டவர்களாக இருத்தல் மிகவும் அரிது.இரண்டு ஆண்டுகளில், தான் நிர்வகித்த நிதித் துறையைச் சீர் படுத்தி, அதற்கென ஒரு vision ஐ உருவாக்கினார்.

அதே சமயம், தனக்குக் கிடைத்த பொது மேடைகளை, இந்தியா என்னும் தேசத்திற்கான கனவுகளைப் பற்றிப் பேச உபயோகித்துக் கொண்டார். அந்தக் கனவுகள், நம் நாட்டிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்து, அதற்கான நீண்டகால நெறிமுறைகளை உருவாக்கிக் கொடுத்த தலைவர்களான காந்தி, நேரு மற்றும் அம்பேட்கரின் நீட்சியாக அமைந்திருந்தன.  தேசத்தின் அறிவுசார் சமூகம் அந்த உரைகளை உள்வாங்கிப் பாராட்டியதை தமிழகம் அறிந்து கொள்ளவில்லை. 

அவரது இரண்டு உரைகளை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். முதலாவது மும்பையில் அவர் நிகழ்த்திய அனில் தார்க்கர் நினைவுச் சொற்பொழிவு. இன்னொன்று அண்மையில் ஜிண்டால் பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளின் இணைப்பு 

1.https://www.youtube.com/watch?v=NEXT810dEeo

2..https://www.youtube.com/watch?v=mOW9fws7NZ8

நண்பர்கள் சிலருக்கு, பிடிஆரை தேவைக்கு அதிகமாக, அதீதமாகக் கொண்டாடுவது பிடிப்பதில்லை.உருவாக்கப்படும் எந்த நிறுவனமும் வீழ்ச்சியை நோக்கியே செல்கின்றன. லட்சியவாதத்தோடு தொடங்கப்பட்ட இந்திய ஜனநாயகம் என்னும் பரிசோதனை முயற்சி இன்று ஊழல் மற்றும் majoritarian அரசியலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

இந்தியா மத அடிப்படைவாத நாடாகிவிடுமோ என்னும் அச்சம் எல்லா நடுநிலையாளர்களிடமும் இருக்கிறது. இந்தக் காலகட்டத்தில், நேர்மையான, களத்தில் மக்கள் பணியாற்றும், தேசத்திற்கான ஒரு vision ஐப் பேசும் அரசியல் தலைவர்கள் அபூர்வம்.

இவரைக் கொண்டாடாமல் வேறு யாரைக் கொண்டாடுவது? இளையராஜாவையும், ரகுமானையும், விஸ்வநாதன் ஆனந்தையும், பிரக்ஞானந்தாவையும், குகேஷையும் போல இவரையும் கொண்டாடுதல் நம் கடமை

இன்று TIME பத்திரிக்கையில் அவர் பற்றிய கட்டுரை வந்திருக்கிறது. தகுதியான மனிதருக்கு உலகின் முக்கியமான பத்திரிக்கை அளித்திருக்கும் கௌரவம் கண்டு மனம் நெகிழ்ந்து போகிறது. டைம் இதழின் கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

கட்டுரை நன்றி; திரு.பாலசுப்பிரமணியன் முத்துசாமி

administrator

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன