வித்தியாசமான இரண்டு திருமண உறவுகள்…
50 வயதில் உள்ள ஆண், மனைவி இறந்தவுடன் அந்தத் தனிமையை கடக்கத் தெரியவில்லை, அதனால் மறுமணம் செய்யலாமா என்று கேட்கிறார். சிலர் திருமண உறவை ரொம்ப நம்புகிறார்கள் என்றால், அவர்களிடம் தாராளமாக செய்து கொள்ளுங்கள் என்றே கூறி விடுவேன்.
ஆமாம், தாராளமாக செய்து கொள்ளுங்கள் என்ற வார்த்தைக்கு முன் வரை தான், அத்தனை தவிப்பும், குழப்பமும், தயக்கமும் கலந்து இருந்தது என்றார்.
தற்போது சொந்தபந்தங்கள், நண்பர்கள் என்று அனைவரின் சம்மதத்துடன் பெண் பார்க்கும் படலம் ஆரம்பமாகி விட்டது. அவரின் முகத்தில் இப்ப தான் மலர்ச்சி வந்திருக்கிறது.
அடுத்ததாக..
32 வயதில் இருக்கும் ஆண், சில தவிர்க்க முடியாத பிரச்சனை காரணமாக அவரது ரிப்போர்ட் அனைத்தும் காண்பித்து திருமணம் தனக்கு வேண்டாம் என்று கூறுகிறார். அதைத் தன்னால் வீட்டில் கூற முடியாது என்றும், அதனால் நீங்க வந்து பெற்றோர்கிட்ட பேசிப் புரிய வைக்கவும் என்றார்.
பெற்றோரிடம் பேசுறேன் என்றதும், இவரின் முகத்தில் இப்ப தான் மலர்ச்சி வந்திருக்கிறது.
ஒரே பையன், நல்ல வேலை, நல்ல குணம் அனைத்தும் இருந்தும் திருமண வாழ்க்கைக்கு சரியான நபர் இல்லை என்று தெரிந்ததும், முறையாக யார் யாரிடம் பேச முடியுமோ பேசுகிறார்.
நேற்று ஒரே நாளில் இரண்டு விதமான மனநிலையை கையாள நேரிடும் போது, நாகரீக வளர்ச்சி எல்லாம் மனித உணர்வுகளுக்கு முன் வெறும் வெற்று காகிதம் போல் இருக்கிறது என்றே தோன்றியது.
இரண்டு பேரும் மனதளவில் புத்துணர்ச்சியுடன் இனி வரும் அடுத்தடுத்த நாட்களில் நிம்மதியாக வாழ ஒரு வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கையை கையில் திணித்து விட்டாச்சு…
இதுவே போதும் என்றார்கள் இருவரும்…
All reactions:
207You, Kavitha, Ramkumar and 204 others