வெடிப்புறப் பேசு

தேவையற்ற பதற்றத்தை குறைக்க உதவும் பயிற்சிகள்

பிரச்சனை இருக்கோ இல்லையோ எதற்கெடுத்தாலும் சிலருக்கு அத்தனை பதற்றம் வரும். கை எல்லாம் அத்தனை நடுங்கும். இல்லையென்றால் கையை அசைத்து அசைத்து பேசுவார்கள்.

இப்படி பேசுபவர்கள் கிட்ட முதலில் பதட்டத்தை கொஞ்சம் மறந்து ரிலாக்ஸாக பேச முயற்சி பண்ணுங்க என்பேன். எனக்குத் தெரிந்த கல்லூரி நண்பன் ஒருவன் இருக்கான். அவனிடம் எதற்கெடுத்தாலும் பதட்டம் இருந்து கொண்டே இருக்கும். கொஞ்சம் வருசம் முன்னாடி எல்லாம் alcoholic ஆக மாறி விட்டான். எதுக்கு குடிக்கிறேன் தெரியல. ஆனால் குடிச்சிட்டே இருக்கணும் போல இருக்கு என்பான்.

Work pressure & அவன் வேலை பார்க்கும் மாநிலம் அவனுக்கு set ஆகல. அந்த சாப்பாடு எல்லாம் இன்னும் கடுப்பேற்ற அவனுடைய பதட்டம் எல்லாம் மாறி, ஒரு மாதிரி வெறியாகவே இருந்தான். என்ன பேசினாலும் யோசிக்காம எல்லாரையும் திட்டுவது, எறிந்து விழுவது என்று இருந்தான். அவன் வீட்டில், ஆபிஸில், நண்பர்கள் எல்லாரும் பேசவே யோசிப்போம். அவனே பேசினால் ம்ம் கொட்டிட்டு இருந்தோம். 3 மாசம் பேசுவான், 6 மாசம் காணாமல் போய் விடுவான்.

போன வருசம் இதே நேரம் 2022 ஆரம்பிக்கும் போது ரொம்ப desperate ah இருக்கேன். என்னோட குணதுக்கும், நான் பண்ணுற விஷயத்துக்கும் சம்பந்தமே இல்லை என்று சொல்லி பேசிட்டு இருந்தான்.அவன்ட்டயும் சொன்னது, உனக்கு கவலையை விட பதற்றம் தான் இருக்கு. உடம்பின் பதற்றம் குறைந்தால் தான் அடுத்தவங்க என்ன பேசுறாங்க உனக்கு புரிய வரும். இல்லையென்றால் நீ மட்டும் தான் பேசிட்டு இருப்ப. நான் என்ன பேசினாலும் உனக்கு புரியாது. உன் brain புரிந்து கொள்ள முயற்சி செய்யாது என்றேன்.

என்ன செய்யணும் சொல்லித் தொலை செய்றேன், என்றான், முதன் முதலில் ..எங்காவது போய் ஜிம்ல ஒரு ரெண்டு மாசம் போய் ஒர்க் அவுட் பண்ணு. உன் மனதின் பதற்றம் எல்லாமே உடம்பு வெளியேற்ற வேண்டும். உடம்பு டயர்ட் ஆகி படுத்தவுடன் தூக்கம் வரணும் என்றேன்.

Running, Jacking, Floor exercise or Zumba இப்படி எல்லாமே நம் மனதின் உள்ள தேவையில்லாத பதற்றத்தை வெளியேற்ற உதவும் சொன்னேன். அதுக்கு அப்புறம் எப்பவும் போல் பல மாசம் காணோம். மறுபடியும் நேற்று பேசினான். பயபுள்ள ஜிம் ஒர்க் அவுட் பண்ணி, fitness freak ஆக மாறி ஜாலியா பேசிட்டு இருந்தான். தற்போது desperate ஆக இல்லாமல் relax ah தேடி dating போக ரெடி ஆகிட்டேன் சொல்லிட்டு இருந்தான். நல்லா இருந்தால் சரி என்றேன்.

கவலை என்பது வேறு. Frustration என்பது வேறு. இது ரெண்டையும் குழப்பிக் கொண்டு தான் தன்னுடைய வாழ்க்கை சரியில்லையோ சொல்லி ரொம்ப குழப்பிக் கொள்வார்கள். இது புரிய வேண்டும் என்றால், நாம கொஞ்சம் புரிந்து கொள்ளும் நிலைக்கு நம்மை தயார்ப்படுத்த வேண்டும். அதுவே நம் மனதுக்கு நாம நம்ம வாழ்க்கையை என்ன ஆனாலும் சரி செய்து கொள்வோம் என்ற நம்பிக்கை வரும்.

உலகமே தலை கீழாக மாறினாலும், என்னால் முடிந்த அளவு அதனை சரி செய்வேன் என்ற நிதானம் தான் எல்லாருக்கும் தேவை. அதையே பயபுள்ள செய்துட்டு வந்து இருக்கு. எனக்காக என்னை நல்லா பார்த்துக்குறேன் அது பிடிச்சு இருக்கு சொன்னேன். இது தான் எல்லாருக்குமே தேவை. அடுத்தவங்க வந்து நம்மை பார்க்கணும் யோசிக்கும் போது யாரும் செய்யவில்லை என்றால் அதுவே பல கோபத்தை உருவாக்கும். நாம நம்மை பார்த்து கொள்ள ரெடி ஆகணும். அவ்வளவு தான்.

-காயத்திரி மஹதி

administrator

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன