வெடிப்புறப் பேசு

Blog

கட்டுரைகள்

புத்தகத் திருவிழாவுக்கு மட்டுமல்ல, எல்லா கண்காட்சிகளுக்கும் நிரந்தர அரங்கம் தேவை

புத்தகத் திருவிழாவுக்கு மட்டுமல்ல, எல்லா கண்காட்சிகளுக்கும் நிரந்தர அரங்கம் தேவை இரண்டு நாட்களாக சென்னையில் மழை என்று செய்திகள் பார்க்கிறேன். இதேபோல கடந்த ஆண்டுகளிலும் நடந்திருக்கிறது. ஒவ்வொரு ஜனவரியிலும் பருவமழையின் மிச்சசொச்சம் இருக்கவே செய்யும். சென்னை புத்தகத் திருவிழாவை ஜனவரியில்தான் வைத்தாக வேண்டும் என்பது இல்லை. (2015 டிசம்பர் வெள்ளம் காரணமாக ஜனவரியில் நடத்தாமல் ஏப்ரலில் நடத்தினார்கள்.) ஜனவரி என்பது புத்தாண்டின் உற்சாகம் தருவதாக இருக்கலாம்தான். ஆனால் பல வகைகளிலும் இது உகந்த மாதம் அல்ல. 1. […]

Read More
கட்டுரைகள்

“பலனை மட்டுமே பார்த்தால் சமூக பிரச்சனைகளை தொட முடியாது..”

பத்திரிகையாளர் மணா தனது ஊடக வாழ்க்கை அனுபவங்கள் குறித்து  ‘ஊடகம் யாருக்கானது?’ என்ற தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த நூல் குறித்து  ஆய்வாளர் பொ.நாகராஜன் திறனாய்வு செய்துள்ளார். அதனை இங்கே வழங்குவதில் பெருமிதம் கொள்கின்றோம். 

Read More
கட்டுரைகள்

“அடுக்கடுக்காகத் திரைமறைவு சூழ்ச்சிகள் தொடர்ந்து கொண்டே இருந்தது…”

-1986-ல் விஜய்காந்த் அளித்த பேட்டி..  மறைந்த நடிகர் விஜயகாந்த் அளித்த பேட்டி வெளியான ஊடகம் எது என்று எங்கள் கவனத்துக்கு வரவில்லை. இந்த பேட்டியை ஸ்ருதி டிவியின் ஆசிரியர் திரு.கபிலன் அவர்கள் தனது முகநூலில் பதிவு செய்திருந்தார். அதனை இங்கு மறுபதிவு செய்கின்றோம். மற்றபடி இந்த பேட்டிக்கு எந்தவித உரிமையும் நாங்கள் கோரவில்லை.   ‘’ரஜினிகாந்த் இருக்காரே, நீ எதுக்கு இன்னொரு காந்த்” இங்கிலீஷ்ல ‘இன்சல்ட்’னு சொல்வாங்களே அதுதான். சினிமா இண்டஸ்ட்ரியில ரொம்ப அதிகமான அவமானங்களைத் தாங்கிக்கிட்டவங்களில் ஒருத்தன் […]

Read More
கவனம் பெறாத செய்திகள்

உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் பத்திர வழக்கு 31ல் விசாரணை 

உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் பத்திர வழக்கு 31ல் விசாரணை  தேர்தல் பத்திரங்கள் மூலம், யார் என தெரியாத நபர்கள், யார் என தெரியாத நிறுவனங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு கோடிக்கணக்கான பணம் நன்கொடையாக பெறப்படுகிறது. இதில் வெளிப்படை தன்மை தேவை என்று கூறி ஜனநாயக மறுசீரமைப்புக்கான சங்கம் எனும் தன்னார்வ அமைப்பின் சார்பில் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.  2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு இந்த விஷயத்தில் சட்டப்பூர்வ அங்கீகாரம் […]

Read More
கட்டுரைகள்

நம்பிக்கை ஒளியேறிய ராகுலின் கண்கள்…

நம்பிக்கை ஒளியேறிய ராகுலின் கண்கள்… ஒரு தேசத்தின் தலைவன் குடிமக்களின் மீது நிறைந்த அன்பு கொண்டவராக இருக்க வேண்டும். இறுக்கமான உடல்மொழியும், பகட்டும் கொண்டவராக இருப்பவர்கள் தலைவர்களுக்குரிய தகுதியற்றவர்கள். சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்த தனது கட்சியின் நிலைப்பாட்டை ஊடகங்களிடம் பகிர்ந்து‌ கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின்‌ முதல்வர்களோடு அமர்ந்து நேற்று செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தினார் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி. ராகுல் காந்தியின்‌ எளிமையையும், அவரது சக மனிதர்கள் மீதான நேசத்தையும் நான் தொடர்ந்து கவனித்து […]

Read More
கட்டுரைகள்

அரசியல் இடைத்தரகர்களின் அறமற்ற செயல்கள்…

அரசியல் இடைத்தரகர்களின் அறமற்ற செயல்கள்… அரசின் திட்டங்கள் என்பவை மக்களுக்கானவை, அதற்காக எந்த ஒரு பணமும், யாருக்கும் கொடுக்கத் தேவையில்லை என்பதே உண்மை. ஆனால், மாநில அரசின் திட்டமானாலும் சரி, மத்திய அரசின் திட்டமானாலும் சரி மக்களுக்கு உள்ள அறியாமையைப் பயன்படுத்தி உள்ளூர் அரசியல் தரகர்கள் இன்னும் மக்களை ஏமாற்றி வருகின்றனர் என்பதுதான் உண்மை. அவற்றிற்கு ஆதாரமாக திரு. சிவராமன் ஐய்யம்பெருமாள் அவர்களின் பதிவை முதலிலும், திரு.ஷாஜஹான் அவர்கள் பதிவை இரண்டாவதாகவும் பகிர்ந்துள்ளோம்.  மின் இணைப்பு வாங்கி […]

Read More
கட்டுரைகள்

மணல் குவாரிகளில் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு முன்பு முறைகேடுகள் நடக்கவில்லையா?

மணல் குவாரிகளில் 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கு முன்பு முறைகேடுகள் நடக்கவில்லையா? தமிழ்நாட்டில் மணற்குவாரிகளில் அளவு கடந்து மணல் அள்ளப்படுவதால் நிலத்தடி நீர்வள ஆதாரமே பாதிக்கப்பட்டுள்ளது. மணற்குவாரிகளுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உட்பட பல தலைவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.  மணற்குவாரிகளால் நீர்வள ஆதாரம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் ஆறுகளில் மரணபள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அவற்றில் சிக்கி அப்பாவி சிறுவர், சிறுமியர் தொடர்ந்து பலியாகி வருவதும் தொடர் கதையாகி இருக்கிறது.  எந்த ஒரு […]

Read More
கட்டுரைகள்

பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனை கொண்டாடுதல் நம் கடமை…

பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனை கொண்டாடுதல் நம் கடமை… பொதுத் தளங்களில், இரண்டு தலைவர்களை திரும்பத் திரும்பப் பேச வேண்டியுள்ளது.இருவருமே அரசியல் வாரிசுகள். ஆனால் இருவருமே அது தரும் அதிகாரத்தைத் தாண்டியவர்களாக வெளிப்படுகிறார்கள். இன்று இந்தியாவின் பிரதமர் toxic patriarchy யின் பிரதிநிதி என்றால், இவர்கள் இருவரும் compassionate humanity யின் தரப்பில் நிற்கிறார்கள்.அதில் எனக்கு பிடிஆர் மிக முக்கியமானவராகத் தெரிகிறார். தமிழ்நாட்டின் அரசியல் என்பது அதீதப் போட்டிகள் நிறைந்தது. அதன் அத்தனை அசிங்கங்களும் ஒவ்வொரு தேர்தலிலும் வெளிப்படுவதை நாம் […]

Read More
முக்கியச் செய்திகள்

ஆபத்தான சாகசங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா டிடிஎப்.வாசன்

ஆபத்தான சாகசங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா டிடிஎப்.வாசன் பைக் சாகசங்களால் டிஜிட்டல் உலக இளைஞர்களை வசீகரிக்கும் டிடிஎப் வாசன் காஞ்சிபுரம் அருகே பைக் சாகசத்தின்போது விபத்துக்குள்ளானது. பைக் சாகசத்தால் தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வரும் வாசன் இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். டிடிஎப். வாசன் விபத்து குறித்தும் அவரது பைக் சாகசம் குறித்தும் சமூக வலைதளங்களில் பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.  பிரபல கவிஞர் கவிதா பாரதி மற்றும் மருத்துவர் சரவணக்குமார் ஆகியோர் தங்கள் முகநூல் பக்கங்களில் எழுதிய கருத்துகள் இங்கு […]

Read More
கவனம் பெறாத செய்திகள்

நாங்குநேரியில் பாதிக்கப்பட்டோருக்கு தீர்வு கிடைக்க அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் தேவை…

நாங்குநேரியில் பாதிக்கப்பட்டோருக்கு தீர்வு கிடைக்க அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் தேவை… தமிழ்நாட்டை உலுக்கிய நாங்குநேரி சம்பவம் கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாலை நடைபெற்றது. நெல்லை மாவட்டம் வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர் சின்னத்துரை, தனது சக மாணவர்கள் 3 பேரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தனது தாயிடம் கூறினார். பள்ளி நிர்வாகத்திடம் முறைப்படி புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேர் நாங்குநேரியில் உள்ள […]

Read More