குழந்தைகளை தினமும் 20 நிமிடங்கள் அணைத்துக் கொள்வதின் பலன் என்ன தெரியுமா?
20 minutes hugging பற்றி தற்செயலாக நான் எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது தான் body boundaries பற்றி ஒரு பெண்ணின் தாயார் பேசிய வீடியோ வைரலாகி கொண்டு இருக்கிறது.
பொதுவாகவே என் நண்பர்கள் ஒரு குற்றச்சாட்டாக கூறுவது போல நான் கொஞ்சம் கூடுதல் அம்மாவாக இருப்பேன். இதைத்தான் என் சுற்றத்தினர் ‘என்னமோ பெருசா இவதான் ஊர்ல இல்லாத பிள்ளையைப் பெத்த மாதிரி’ என்று முகவாய்க் கட்டையில் இடித்துப் பாராட்டுவர்.
வாழ்க்கையில் ஏதாவது ஒன்றையாவது முழுமையாக செய்ய வேண்டும் இல்லையா. தவிரவும் எல்லோருடைய பிறப்பிற்கும் ஏதாவது ஒரு அர்த்தம் இருக்கும் என்பார்களே. என்னுடைய பிறப்பின் பயன் இவர்கள் இரண்டு பேரையும் நல்ல முறையில் நல்ல மனிதர்களாக வளர்த்து ஆளாக்குவது தான்
என நானே மனதில் வரித்துக் கொண்டேன். இதற்கு நான் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை சிறிது அதிகம் போலத் தோணலாம்.
நண்பர்களுடன் தொலைபேசியில் அளவளாவுவதோ தொலைக்காட்சித்தொடர்களை பார்ப்பதோ ஷாப்பிங் போவதோ எதுவுமே கிடையாது. But no regrets.
என்னுடைய மூத்த அதிகாரி ஒருவர் கூறுவார் ‘எல்லாரும் பத்து மாதம் தான் குழந்தையை சுமப்பாங்க. நீ மட்டும்தாம்மா அவனுக்கு பத்து வயசு ஆகியும் சுமந்துட்டு இருக்கே’.என்று. அவரது வாய் முகூர்த்தமோ என்னமோ அவர் கூறிய அந்த நேரம் எனது இரண்டாவது குழந்தை கருவாகி இருந்தது அடுத்த வாரத்தில் தெரிய வந்தது.
நான் வாங்கி வந்த வரமோ என்னமோ என்னுடைய குழந்தைகளை பெரும்பாலான நேரமும் நான் தனியாகவே வளர்த்தெடுக்க வேண்டிய சூழ்நிலை. எப்பொழுதும் அவர்களை என் அரவணைப்பிலேயே வைத்திருப்பேன்.
பெரியவனுக்கு ஒரு பத்து வயது ஆகும் போது ‘அம்மா நீ தொடும் போது எனக்கு கூச்சமாக இருக்கிறது’ என்று ஒரு நாள் கூறினான். அந்த நிமிடம் முதல் அவனைத் அநாவசியமாகத் தொடுவதை நிறுத்திக் கொண்டேன். இப்போதும் தேர்வுகளுக்கு போகும் போதும் விடுமுறை முடிந்து விடுதிக்கு கிளம்பும்போதும் மட்டும் பட்டுப் படாமல் நெற்றியில் ஒரு முத்தம் கொடுப்பதோடு சரி.

ஆனால் சின்னவன் அப்படி இல்லை. Being a cancerian (ஜூன் 22 முதல் ஜூலை 22 வரை பிறந்தவர்கள்) அவனுக்கு எப்பொழுதும் ஒரு அரவணைப்பு தேவை. நான் முன்பு எப்பொழுதோ ஒருமுறை படித்திருக்கிறேன். ஒருநாளில் 20 நிமிடங்கள் அணைத்துக் கொள்வது என்பது குழந்தைகளின் மூளை மற்றும் உடல்வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது என்று.
முக்கியமாக அவர்கள் காலையில் தூங்கி எழுந்தவுடனும் (அந்த நாளை புத்துணர்ச்சியுடன் எதிர்கொள்வதற்கு) பள்ளிக்கு கிளம்பி செல்லும் போதும் ( உனக்கு எதுவென்றாலும் நான் இருக்கிறேன் என்ற பாதுகாப்பு உணர்வை கொடுப்பதற்கு), பள்ளியில் இருந்து திரும்பி வரும் போதும் (தனக்காக ஒருவர் காத்திருந்தார் என்ற திருப்தியை கொடுப்பதற்கு) இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன் ( நிம்மதியாக ஆழ்ந்து உறங்குவதற்கு)
இது தவிர அவர்கள் எப்பொழுதெல்லாம் உடல் அளவிலோ மனதளவிலோ காயப்படுகிறார்களோ அப்பொழுதெல்லாம் (பாத்துக்கலாம் விடுடா என்ற ஃபீலிங் கொடுப்பதற்கு)
இது குழந்தைகளுக்கு உங்கள் மீதுள்ள நம்பிக்கையை அதிகப்படுத்தும் அவர்களின் பயங்களைக் குறைக்கும்.. மேலும் இருவருக்கும் நடுவில் உள்ள பிணைப்பை அதிகப்படுத்தும்.
இங்கு சுரக்கும் ஹார்மோன் oxytocin தான். இது மன அழுத்தத்தை குறைக்கும் தன்மை கொண்டது.
உங்கள் கணவர் அலுவலகத்திற்கு கிளம்பும் போதும் இதை நீங்கள் முயற்சிக்கலாம். அவரது அலுவலக நேரம் முடிந்ததும் மாலை நேராக வீட்டிற்கு கிளம்பி வர வாய்ப்புள்ளது.
All reactions:
2222