வெடிப்புறப் பேசு

உணர்ச்சி கண்ணாடி அணிந்துகொண்டு பிரச்னைகளை அணுகுதல்…

உணர்ச்சி கண்ணாடி அணிந்துகொண்டு பிரச்னைகளை அணுகுதல்…

நம்மில் பலரும் நம் கைவசம் துப்பாக்கி இல்லாததால் தற்கொலை செய்து கொள்ளாதவர்கள்தான். தற்கொலை எண்ணம் ஒரு மேகம் போல் நிலவை …ஏன் சூரியனையே மறைத்து மனதை இருட்டாக்கும்.

அது கலையும் வரை ஏதோ ஒரு எண்ணத்தையோ, நபரையோ பற்றிக் கொள்ள முடிந்தால் மீளலாம். பெரும்பாலும் தற்கொலை எண்ணங்கள் என்பது உணர்ச்சி என்னும் கண்ணாடி அணிந்துகொண்டு பிரச்சனைகளைப் பார்ப்பதால் வருபவை.

1.நம்பிக்கையின்மை -Hopelessness

2. கையறு நிலை – Helplessness

3 தாழ்வுமனப்பான்மை- worthlessness

இந்த மூன்று கூறுகளின் கலவைதான் தற்கொலை எண்ணங்கள்.அடிக்கடி தற்கொலை எண்ணங்கள் ஏறபட்டால் பயிற்சி பெற்ற உரிய மனநல ஆலோசகரிடம் ஆலோசனை பெறுங்கள்.

உங்களைப் பற்றி,உலகைப் பற்றி மற்றவர்களைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள எண்ணங்களை மாற்றும் ஆலோசனை ( Cognitive Behaviour Therapy) அல்லது உள்ளக் கொதிப்பைத் தணிக்கும் மருந்துகள் தேவைப்படக் கூடும்.

தற்கொலை செய்து கொள்ளலாம். அது reversible ஆக இருந்தால். கோபப்பட்டு கத்துவது போல் அடிக்கடி தற்கொலை செய்து கொள்ளலாம். ஆனால் சனியன் அது irreversible. இத்தனை ஆலோசனைகளும் அது ஒன்றுக்காகத்தான் 

டாக்டர் ஜி ராமானுஜம்.

administrator

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன