வெடிப்புறப் பேசு

மனநல மருத்துவமனையில் தனிநபருக்கு சிகிச்சை கிடைக்குமா?

மனநல மருத்துவமனையில் தனிநபருக்கு சிகிச்சை கிடைக்குமா?

ஒரு அம்மா தனக்கு ரொம்ப மனசு சரியில்லை என்றும், அதனால் தூங்கவே முடியவில்லை என்றும் கூறினார். அதன் பின் அதற்காக மனநல மருத்துவமனையில் மருந்து வாங்க வேண்டும், நானே போய் வாங்கிக் கொள்கிறேன் என கூறிவிட்டு சென்று விட்டார்.

அந்த ஊரில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள மனநலப்பிரிவுக்கு சென்று டாக்டரிடம் பேசி உள்ளார். ஆனால் அவர்கள் வீட்டில் இருந்து யாராவது ஒரு நபர் கண்டிப்பாக வர வேண்டும். அப்படியில்லை என்றால் மருந்து தர மாட்டோம் என்று கூறி இருக்கிறார்கள்.

காயத்ரி ஏன் எனக்கு மருந்து தரவில்லை, நானாக எப்படி யோசித்து போய் இருக்கேன், அதைப்பற்றி எல்லாம் டாக்டர் கவலைப்படாமல், வெறுங்கையுடன் அனுப்பி விட்டார்களே என்று புலம்பினார்.

அடுத்த நாள் கணவருடன் சேர்ந்து போய் அரசு மருத்துவமனையில் மனநலபிரிவில் போய் டாக்டரைப் பார்த்து, மருந்து வாங்கி சாப்பிட்டு தற்போது நிம்மதியாக தூங்குறேன் என்றும் சொன்னார்.

ஏன் தனியாக மனநல மருத்துவமனைக்கு சென்றால் மருத்துவம் பார்க்க மாட்டார்களா என்றால்?

பெரும்பாலும் ஆமாம் என்று பதில் சொல்ல வேண்டும்.

International Classification of disease இதில் குறிப்பிட்ட symptoms இருந்தால் மட்டுமே மனநோயாக எடுத்துக் கொள்வார்கள்.

தனியாக ஒரு நபர் இருந்தால், சட்டப்பூர்வமாக 18 வயதிற்கு மேல் சிந்திக்கும் திறன் இருந்து, மனப்பிரச்சனை இருந்தால், மருத்துவமனையில் இருந்து ஒரு நபரை தங்களுக்கு என்று அவர்கள் சுயமாக நியமித்துக் கொள்ளலாம்.

நல்ல சிந்திக்கும் திறனுடன் 18 வயதிற்கு குறைவாக இருந்து, மனப்பிரச்னை இருந்தால் மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும், அவர்களும் பொறுப்பேற்கவில்லை என்றால், சட்டப்படி நலத்துறை இயக்குனர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.

அதனால் தனியாக மனநல மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம். முடிந்தவரையில் உதவிக்கு கூட ஒரு நபர் இருக்க வேண்டும்.

சட்டப்பூர்வமான இந்தத் தகவல் முழுவதும் டாக்டர். மகேஷ், எனக்கு அறிவுறுத்தியவை. இதனை பலரும் அறிந்து கொள்ளவேண்டும் என்பதால் இதனை இங்கே குறிப்பிடுகின்றேன்.

காயத்ரி மஹதி (மனநல ஆலோசகர்)

administrator

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன